க.பொ.த உயர்தர பரீட்சை ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளை முன்னிட்டு, பாடசாலைகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் எவ்வாறு பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைவாக திருத்தம் செய்யப்படவுள்ளது என்பதைத் தெரிவிக்கும் விசேட அறிவிப்பை கல்வி அமைச்சின் செயலாளர் திரு.எம்.என்.ரணசிங்க பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கும்,  க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதனிடையே தீபாவளியை கொண்டாடும் வகையில் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (24) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்ப் பாடசாலைகளின் தேவை கருதி, ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை விடுமுறை வழங்கலாம் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு பதிலாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்