24.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

சர்வதேச கடலில் கூச்சலிட்ட இலங்கை கடற்படையினர்: கண்டுகொள்ளாமல் சென்ற வெளிநாட்டுக் கப்பல்கள்!

காணாமல் போன 6 கடற்படை வீரர்கள் இன்று பனாமா தென்கிழக்கு கடற்படை கட்டளை தளத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அங்கிருந்த அனைத்து கடற்படையினரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

செப்டெம்பர் 16ஆம் திகதி, சந்தேகத்திற்கிடமான கப்பல்களைக் கண்டறியும் பணியில் இந்தக் குழுவினர் ஈடுபட்டிருந்தபோது படகுடன் காணாமல் போயிருந்தனர்.

​​கப்பலின் இயந்திரத்தில் ஏதோ சிக்கியதன் காரணமாக, கப்பலின் இயந்திரம் செயலிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

பல நாட்களாக பெரும் முயற்சியுடன் இயந்திரத்தை இயக்க முயன்றதாகவும், அது தோல்வியடைந்து இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் 430 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் எல்லைக்கு கப்பல் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல்கள் இந்தக் கப்பலைக் கடந்து சென்றதாகவும், அவர்களிடமிருந்து உதவி கோரி பணியாளர்கள் கூச்சலிட்ட போதிலும், கப்பல்கள் இதனை அவதானிக்கவில்லை என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த கப்பல் சர்வதேச கடற்பரப்புக்கு சென்ற போதும் அதன் இயந்திரத்தை இயக்குவதற்கு பெரும் முயற்சி எடுத்து இம்மாதம் 9 ஆம் திகதி கப்பலின் இயந்திரத்தை இயக்க முடிந்தது என்றார்.

இயந்திரத்தை இயக்கி இலங்கை கடற்பரப்பிற்கு வந்த பிறகு, அது மீண்டும் வேலை செய்வதை நிறுத்தியது. மீண்டும் இயக்கி, நாட்டை நெருங்கி  கடற்படையின் A 521 கப்பலுக்கு தகவல் கொடுத்தது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

காரில் மதுபோதையில் வந்திறங்கிய மாணவி – ஆசிரியர் கைது

east tamil

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

Leave a Comment