மட்டக்களப்பு – சில்லிக்கொடியாற்றில் யானை தாக்கி 7 பிள்ளைகளின் தந்தை பலி!

Date:

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் யானை தாக்கி 7 பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

சில்லிக்கொடியாறு பகுதியில் பண்ணையொன்றில் பராமரிப்பாளராக கடமையாற்றி வந்த காஞ்சிரங்குடா பகுதியை சோர்ந்த 65 வயதையுடைய பாலிப் போடி அரியநாயகம் என்பவரே நேற்று முன்தினம் (15) இரவு 10.00 மணியளவில் யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வரி மதிப்பீட்டாளருக்கு 16 வருட சிறைத்தண்டனை

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து...

புலிகளின் சின்னங்களின்றி உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்!

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்...

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்