ரஷ்யாவில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய பிராந்தியமான பெல்கோரோடில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் சோவியத் நாட்டைச் சேர்ந்த இரண்டு குடிமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ஒக்டோபர் 15 அன்று, பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள மேற்கு இராணுவ மாவட்டத்தின் பயிற்சி மையத்தில் CIS நாட்டின் இரண்டு குடிமக்கள் பயங்கரவாதச் செயலைச் செய்தனர்” என்று பாதுகாப்பு அமைச்சகம் மேற்கோளிட்டுள்ளது.
சிஐஎஸ், அல்லது கொமன்வெல்த் ஒஃப் இன்டிபென்டன்ட் ஸ்டேட்ஸ், சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த குடியரசுகளுக்கு இடையே உருவாக்கப்பட்டது. உக்ரைன் முன்பு சோவியத் நாடாக இருந்தது.
ரஷ்ய இராணுவத்தில் சேரும் தன்னார்வலர்களுக்கான பயிற்சியின் போது இந்த தாக்குதல் நடந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
“இதன் விளைவாக, 11 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலமான கெர்ச் பாலத்திற்கு டிரக் குண்டு வெடித்ததில் சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைன் முறையாக பொறுப்பேற்கவில்லை என்றாலும், உக்ரைனே இதன் பின்னணியில் இருக்கலாமென நம்பப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அதை பகிரங்கமாக குறிப்பிட்டார்.
அத்துடன், உக்ரைன் மீது மிகக்கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.