31.9 C
Jaffna
April 28, 2024
விளையாட்டு

இலங்கையை பந்தாடியது நமீபியா!

ரி20 உலகக்கிண்ணத்தின் முதலாவது ஆட்டத்தில் நமீபியாவிடம் இலங்கை அவமானகரமான தோல்வியை சந்தித்தது.

கோடை மழைபோல கிடைத்த ஆசிய கிண்ண வெற்றியின் பின்னர் சற்றே “மிதப்பானஹ பேச்சுக்களுடன் உலகக்கிண்ணத்திற்கு சென்ற இலங்கை, நமீபியாவிடம் 55 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நமீபியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை வீரர்களின் கனவில் நீண்டகாலத்திற்கு துர்சொப்பனமாக வந்து செல்வார்கள். முதலில் ஆடிய நமீபியா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.

இலக்கை விரட்டிய இலங்கை 19 ஓவர்களில் 108 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.

ஜான் ஃப்ரைலின்க் மற்றும் ஜேஜே ஸ்மித் ஆகியோர் நமீபியாவை ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுத்தனர், பின்னர் நமீபியா வேகபந்து வீச்சாளர்கள் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையை அடித்து நொருக்கினர். பென் ஷிகோங்கோ பவர்பிளேயின் உள்ளே இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார், டேவிட் வைஸ் மற்றும் ஃப்ரைலின்க் ஆகியோரும் இலங்கையை படாய்ப்படுத்தினர்.

போட்டியின் ஆரம்பம் முதலே 164 ரன்களைத் துரத்துவதில் இலங்கை வெற்றி பெறுமென்ற வாய்ப்பிருக்கவில்லை. பானுக ராஜபக்ச மற்றும் தசுன் ஷனக ஆகியோர் அதிகபட்சமான 34 ரன்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

கடந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் நமீபியா அணி, அயர்லாந்தை வீழ்த்தியது. இந்த முறை ஆசிய கோப்பை சாம்பியனும், T29 போட்டிகளில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றதுமான இலங்கை அணியையும் வீழ்த்தியுள்ளனர்.

முதலில் ஆடிய நமீபியா,  34 பந்துகள் மீதம் உள்ள நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. அவர்கள் 140 ரன்களுக்குக் குறைவான ரன்களையே எட்டலாமென  தோன்றியது.

ஆனால் பிரைலின்க் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு ஒரு அற்புதமான இணைப்பாட்டத்தை பெற்றனர். 16வது ஓவரில், ஃப்ரைலிக் துஷ்மந்த சமீராவின் லெக்சைடில் நான்கு ஓட்டங்களுக்கு விளாசிளாசிர். அதன்பிறகு ரன்கள் விரைவாக வந்தன – ஸ்மித் டீப் மிட்விக்கெட்டில் மற்றொரு சிக்ஸரை அடித்தார், ஃப்ரைலின்க் 28 பந்தில் 44 ரன்களை எடுத்தார். ஸ்மித் 16 ரன்களில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார்.

இருவரும் சேர்ந்து கடைசி 34 பந்துகளில் 70 ரன்களை எடுத்தனர். இதுவே போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

பவர்பிளேயில் இலங்கையின் தடுமாற்றம்

ஆசியக் கிண்ணத்தில் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், ஆனால் இன்று குசல் மெண்டிஸ் மற்றும் பதும் நிஸ்ஸங்க ஆகியோரால் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றனர்.

மெண்டிஸ், நிஸங்க. தனுஷ்க குணதிலக ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை 3 விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை பவர்பிளே 38 ரன்களை மட்டுமே பெற்றனர்.

மிடில் ஆர்டரின் சரிவு இன்னும் மோசமாக இருந்தது. தசுன் ஷனக மற்றும் பானுக ராஜபக்ச ஆட்டத்தின் போக்கை திருப்ப முயன்றனர். எனினும், அது பலனளிக்கவில்லை.

நமீபியாவின் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் மந்தநிலையை சிறப்பாகப் பயன்படுத்தியது. இலங்கை வீரர்கள் 6 பவுண்டரிகளை மட்டுமே அடித்தனர்.

தசுன் சானக 29, பானுக ராஜபக்ச 20 , தனஞ்ஜய டி சில்வா 12 ஓட்டங்களை பெற்றனர்.

நமீபியாவின் டேவிட் வைஸ் 16 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், பெர்னார்ட் ஷால்ட்ஸ் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை வீரருக்கு மரண அடி: மும்பையை வீழ்த்தியது டெல்லி!

Pagetamil

ரி20 உலகக்கிண்ண தொடர் விளம்பரத்தூதர் உசைன் போல்ட்

Pagetamil

மகளிர் ஒருநாள் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் சாமரி அத்தப்பத்து முதலிடம்!

Pagetamil

மகளிர் கிரிக்கெட்டில் 300+ ஓட்டங்களை விரட்டியடித்த முதல் அணியானது இலங்கை!

Pagetamil

‘எனக்கு பதில் வேறு வீரரை செலக்ட் பண்ணுங்க’ – டுபிளெசியிடம் மேக்ஸ்வெல் வெளிப்படை!

Pagetamil

Leave a Comment