களனி, பட்டிவில நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தை பயன்படுத்த வேண்டாம் என கனரக வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பாலம் பாதுகாப்பற்றது எனவும், எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கனமழையினால் கம்பஹாவில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பஹா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1