குழந்தையை போராட்டத்திற்கு அழைத்து வந்தது பற்றி விசாரணையாம்!

Date:

காலி முகத்திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குழந்தையொன்று அழைத்து வரப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் மாநாட்டிற்கு கட்டுப்பட்ட நாடு என்ற வகையில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிசார் ஒருவரை இழுத்து சென்ற போது, அவரது குழந்தை பாதிக்கப்பட்டது. குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலைமையில், பொலிஸ் பேச்சாளர்  இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் நடந்த போராட்டங்கள் தொடர்பாக ஏதேனும் புரிதல் இருந்தால், குழந்தைகளை உண்மையில் நேசிக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை அத்தகைய இடத்திற்கு கொண்டு வரக்கூடாது,” என்று அவர் கூறினார்.

தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது என எஸ்.எஸ்.பி தல்துவ கருத்து தெரிவித்தார்.

அப்படிச் செய்யாமல், குழந்தையைத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முன்வருவது அல்லது குழந்தையைத் தன் பாதுகாப்பிற்கு முன் நிறுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி

மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு...

ஈரான் ஜனாதிபதி பதவி விலகுகிறாரா?: உண்மை என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியில், ஈரான்...

தன்சலுக்காக காத்திருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி

மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்