வவுனியாவில் 57.02மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Date:

வவுனியாவில் நேற்றையதினம் அதிக மழை வீழ்ச்சியாக 57.02 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்கள அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (10) காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் மழை வீழ்ச்சியான 57.02 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பிற்பகல் 2மணியின் பின்னர் அதிக மழைபெய்ததுடன் இரவு வரை மழை பெய்து வருகின்றது. மாலை வேளையில் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் இக்காலப்பகுதியில் பொது மக்கள் மிகுந்த அவதானமுடன் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதான வீதிகள் உள்ளக வீதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றதை காணமுடிந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தன்சலுக்காக காத்திருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி

மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று...

Update: சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட...

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்