விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி பெற்றோராயினர்: வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள்!

Date:

‘நயன்தாராவும், நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம்’ என இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். 6 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த இருவருக்கும், கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி, அனிருத் என திரையுலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். இவர்களது திருமண வீடியோவை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும். உயிர் மற்றும் உலகம்”என பதிவிட்டுள்ளார்.

பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/VigneshShivN/status/1579094363095052288

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்