கலர்ஃபுல் காதல் + காமெடி: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட ட்ரெய்லர்

Date:

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அண்மையில் வெளியான ‘டான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ஜெஸ்ஸிகாவும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஒக்டோபர் 21ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘சாதி மதம்னு இன்னுமாடா அடிச்சிகிறீங்க’ என்ற சத்யராஜின் வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. கடந்த முறை மாணவராக ‘டான்’ படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் தற்போது அப்டேட்டாகி ஆசிரியராக இப்படத்தில் நடித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்தவரை இந்தியர் ஒருவர் காதலிக்கிறார். அவர்களின் காதலில் நிகழும் பிரச்னைகளை காமெடி கலந்து கலர்ஃபுல்லாக கொடுத்திருக்க முயன்றிருப்பதை படத்தின் ட்ரெய்லர் உணர்த்துகிறது.

பெரிய அளவில் சீரியஸ்னஸ் இல்லாமல் ட்ரெய்லர் ஜாலியாகவே கடக்கிறது. படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...

4வது மாடியில் சுரேஷ் சாலேயின் காற்சட்டை கழற்றப்பட்டதா?: அந்த ‘அருவருப்பான’ சம்பவம் எது?

முன்னாள் எஸ்.ஐ.எஸ். இயக்குனர் சுரேஷ் சாலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை மனநல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்