அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு ஒத்திவைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (6) பிற்பகல் சபையில் அறிவித்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பில் இன்றும் (6) நாளையும் விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு முன்னதாக இணக்கம் தெரிவித்திருந்தது.