ஒரு சாதாரண தேநீர் மற்றும் ஒரு கப் பால் தேநீருக்கான அதிகபட்ச விலையை அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு இது தொடர்பான கடிதம் நாளை (7) அனுப்பி வைக்கப்படும் என அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இதன்படி, ஒரு சாதாரண தேநீரின் அதிகபட்ச விலை 30 ரூபாவாகவும், ஒரு கப் பால் தேநீரின் அதிகபட்ச விலை 100 ரூபாவாகவும் விற்பனை செய்யுமாறு கோரப்படுவதாக அவர் கூறினார்.