பிரபல மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் அன்ரனி ஆகியோர் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, பெருங்கூட்டத்தின் மத்தியில் பாலியல் அத்துமீறலிற்கு ஆளாகியுள்ளனர். எல்லைமீறி நடந்து கொண்ட ஒரு இளைஞனை சானியா அறைந்தார்.
கேரளாவின், கோழிக்கோட்டில் உள்ள ஹைலைட் மோலில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் நடந்தது.
மலையாள திரைப்பட நடிகைகள் சானியா, கிரேஸ் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை சமூக ஊடக தளங்களில் வெளிப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை கிரேஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “கோழிக்கோடு நான் மிகவும் விரும்பிய இடம். ஆனால், இன்றிரவு ஒரு நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் என்னைப் பிடித்தார். எங்கே என்று சொல்ல எனக்கு அருவருப்பாக இருக்கிறது! விளம்பரத்தின் ஒரு பகுதியாக பல இடங்களுக்குச் சென்றோம். ஆனால், இதுபோன்ற பரிதாபமான அனுபவம் வேறு எங்கும் எனக்கு ஏற்பட்டதில்லை. என் சக ஊழியருக்கும் இதே அனுபவம் இருந்தது. அவள் பதிலளித்தாள்… ஆனால் நான் ஒரு கணம் ஊமையாக இருந்ததால் என்னால் அந்த சூழ்நிலையில் முடியவில்லை” என்றார்.
#SaturdayNight promotion at Kozhikode HiLite mall…!!
Someone misbehaved with #Saniya…!! Mis management from event managers 🤦Again it's proved that HiLite mall is not a best place for movie promotion! pic.twitter.com/ko3UvojhVh
— AB George (@AbGeorge_) September 27, 2022
சானியா குறிப்பிட்டபோது “விளம்பரத்தின் ஒரு பகுதியாக கோழிக்கோட்டில் பல இடங்களுக்குச் சென்றோம். மாலில் நடந்த நிகழ்ச்சி நிரம்பியதால், கூட்டத்தைக் கையாள முடியாமல் பாதுகாப்புப் பணியாளர்கள் சிரமப்பட்டனர். நாங்கள் செல்லும் போது, ஒரு பையன் என் சக ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டான் ஆனால் அவளுக்கு எதிர்வினையாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. நானும் அதையே அனுபவித்தேன், ஆனால் நீங்கள் வீடியோவில் பார்த்தது போல் நான் பதிலளித்தேன்“ என்றார்.
மற்ற நடிகை அதிர்ச்சியில் இருப்பதாகவும், எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
இந்த சம்பவம் பற்றி விசாரிக்க விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள பொலிசார் அறிவித்துள்ளனர். தம்மிடம் அத்துமீறி நடந்தவர்களை அடையாளம் காட்ட முடியுமென நடிகைகள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.