குருநாகல் நகரிலுள்ள வர்த்தக ஸ்தலமொன்றில் வைத்து வர்த்தகரைக் கொன்று அவரது தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
சிசிடிவி கமராக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குருநாகல் பிரதேசத்தில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரிவதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் இரும்பு குழாய் மற்றும் திருடப்பட்ட தங்கச் சங்கிலி என்பன அவரது கராஜில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் 8 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1