இன்று காலை கம்பஹா தனோவிட்ட பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 29 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது, கலென்பிந்துனுவெவயிலிருந்து கொழும்பு நோக்கிப் பேருந்தில் பயணித்த பெண் தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்டாடதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தனோவிட்ட நகரில் உள்ள மதுபான விடுதியில் கொள்ளையடிக்க வந்த சந்தேக நபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர்கள் கொள்ளைக்காக வந்த வாகனத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஸ்ஸின் பின் ஆசனத்தில் இருந்த பெண் படுகாயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.