26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

பாடசாலை மாணவர்களிடம் தேவையற்ற கட்டணங்கள் அறவிடக்கூடாது: கல்வியமைச்சு அறிவிப்பு!

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்கள் தவிர்ந்த சிறுவர் ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க பாடசாலை நிர்வாகங்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் முறைசாரா பணம் வசூலிப்பதைத் தடைசெய்து 2015/5 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கல்விச் செயலாளர், குறிப்பாக அதிபர்கள் கடுமையான நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் தேவையற்ற சுமைகளை அவர்கள் மீது சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

சமீப நாட்களாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பலவிதமான பணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

Leave a Comment