தொட்டலங்க, கஜிமாவத்தை பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 80 வரையான குடிசை வீடுகள் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன.
நேற்றிரவு 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
இதன்போது 12 தீயணைப்பு வாகனங்கள் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உடனடி உதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1