25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
உலகம்

அமெரிக்க டொலருக்கு எதிராக பிரித்தானிய பவுண்ட் மோசமான வீழ்ச்சி!

1971 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிராக பிரித்தானிய பவுண்ட் மிக மோசமாக சரிந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு இன்று காலை சுமார் 4 வீதம் சரிந்து, 1.5 ஆக இருந்தது.

பின்னர் அது சற்றே மீண்டு, 1.0327 ஆக காணப்பட்டது.

பிரிட்டனின் புதிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் சர்ச்சைக்குரிய சில பொருளாதார திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

வரலாறு காணாத வரிச் சலுகைகள், பெரிய அளவில் கடன் பெறுவதற்கான திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

அது பணவீக்கத்தை மேலும் மோசமாக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருவதால் டொலரின் மதிப்பு அதிகரித்ததால் பவுண்டும் அழுத்தத்தில் உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

காஸா எல்லையில் இன்று போர் நிறுத்தம்

east tamil

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

east tamil

Leave a Comment