27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தரை நடு வீதியில் உருட்டியெடுத்த நபர்கள்!

மிஹிந்தலை கல்லஞ்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கல்லஞ்சிய பொலிஸ் சார்ஜன்ட் வாரயதியா தாக்கப்பட்டுள்ளார்.

மிஹிந்தலைக்கு வந்த சார்ஜன்ட் திருகோணமலை வீதியிலுள்ள கருவலகஸ்வெவ விகாரைக்கு முன்பாக உள்ள சந்தைக்கு சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் இந்த சார்ஜண்டை தரையில் விழுத்தி,  தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அருகில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரும் தகராறை தடுக்க முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை.

தாக்குதலுக்கு உள்ளான சார்ஜன்ட் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நீல நிற சட்டை மற்றும் அது தொடர்பான காற்சட்டை அணிந்திருந்தார்.

இவ்வாறு தாக்கிய சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனையாளர்கள் என அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் இதுவரை வரவில்லை என நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பொலிஸ் உத்தியோகத்தரை தரையில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்வது பாரிய குற்றமாகும் என்பதால், சந்தேக நபர்கள் இருவரும் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

Leave a Comment