யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (18) இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச.துசாளன் (18) என்ற இளைஞனே காயமடைந்தார்.
நண்பன் ஒருவரின் பிறந்தநாளிற்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆனைக்கோட்டை, மூத்தவிநாயகர் கோயிலடியில் வாள்வெட்டுத் தாக்குதலிற்கு இலக்கானதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.
பின்னால் வந்த குழுவே தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் யார், ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்பது தனக்கு தெரியாதென அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1