அஞ்சலிக்காக இப்போது முட்டிமோதுபவர்கள் நெருக்கடி காலத்தில் எங்கிருந்தனர்?: எம்.கே.சிவாஜிலிங்கம்!

Date:

தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே எம் கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நினைவேந்தல்களில் பொதுவாக அனைவரும் இணைந்து அஞ்சலி செலுத்த வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு தியாக தீபம் தீலீபனின் நினைவேந்தலுக்கு காகம் கூட பறக்கவில்லை.

அப்போது நான் கோண்டாவில் பகுதியில் நினைவேந்தலை மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்பாட்டில் இல்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் இவ்வாறான நினைவேந்தலை முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் ஏட்டிக்கு போட்டியாக இல்லாமல் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மாடு மேய்க்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் உகன  பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பகுதியில் வனக்காட்டுக்குள்...

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்