பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜகவை சேர்ந்த சசிகலா புஷ்பாவிடம் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இமானுவேல் சேகரன் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில் பட்டியில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர். பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பாவும் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது அவரது அருகில் இருந்த பாஜக மூத்த நிர்வாகி பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி இடித்துக்கொண்டு அநாகரீகமாக நடந்துகொண்டார். அதுமட்டுமின்றி சசிகலா புஷ்பாவின் கையை பிடிக்க முயற்சித்து, தொட்டுக்கொண்டு இருந்த வீடியோ வெளி சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பாலகணபதியின் கையை சசிகலா புஷ்பா அடுத்தடுத்து தள்ளிவிட்டதும் பதிவாகி இருந்தது.
பாஜகவின் சசிகலா புஷ்பாவிடம் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அக்கட்சியின் மாநில பொதுசெயலாளர் பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.