26.3 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

‘கபுது காக் காக் காக்’ ஒலி எழுப்பிய சட்டத்தரணி மீது வழக்கு தொடர்ந்த பொலிசாருக்கு நீதவான் வைத்த ‘சூடு’!

‘கபுது காக் காக் காக்’ என்ற பிரபல தாளத்திற்கு வாகன ஹோன் அடித்ததாக மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த சட்டத்தரணி ஒருவரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.எஸ்.பிரபாகரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (9) காலி முகத்திடலில் ஒற்றை ஒலியை மட்டும் ஒலிக்காமல் விசில் அடித்ததாக மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் 155(2) பிரிவின் கீழ் சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்னவுக்கு எதிராக கோட்டை பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது பக்கச்சார்பான முறையில் செயற்பட வேண்டாம் என கோட்டை பொலிஸாருக்கு கண்டிப்பான ஆலோசனை வழங்கிய கொழும்பு மேலதிக நீதவான், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் சட்டத்தை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சட்டத்தரணி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், சரத் ஜயமான்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன உள்ளிட்ட குழு சட்டத்தரணிகள் தமது வாடிக்கையாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பேணுவதற்கு சவால் விடுத்தனர்.

மக்கள் கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்த அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

மன்னார் பிரதேச வைத்தியசாலைகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

east tamil

நாளை முதல் மழை பெய்யும்!

Pagetamil

ஓடும் புகையிரதத்துக்குள் மசாஜ்: இலங்கையில் நடந்த சம்பவம்!

Pagetamil

பரீட்சைக்கு சென்ற மாணவன் திடீர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment