70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு: அரியணை ஏறினார் இளவரசர் சார்லஸ்!

Date:

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96.

மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்தார்.

இதனிடையே, அவர் ஸ்கொட்லாந்தின் அபெர்டீன்ஷயரில் உள்ள தனது பால்மோரல் கோட்டையில் அவர் உயிர் பிரிந்தது என பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார்.

1952 இல் அவர் தனது தந்தை ஜோர்ஜ் VI மறைவை தொடர்ந்து, மகாராணியானார். இது, அவர் பதவியேற்ற 70 வது வருடம்.

அவரது நான்கு பிள்ளைகளில் மூத்தவரான வேல்ஸ் இளவரசர் சார்லஸ், 73 வயதில் ராஜாவானார். பிரிட்டிஷ் வரலாற்றில் மிகவும் வயதான வாரிசு இவராவார்.

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்