ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது மாநாடு கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.
ஒன்றிணைவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெற்றது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பல அரசியல் கட்சிகளும் கலந்துகொண்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, பிரதமர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் திரான் அலஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர்கள் பலர் மாநாட்டில் கலந்து கொண்டார்.




