இது நல்ல காரா?… கள்ளக் காரா?: திண்டாடும் பாகிஸ்தான்!

Date:

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் திருடப்பட்டதாக கூறப்படும் சொகுசு கார் பாகிஸ்தானின் கராச்சி நகரில் மீட்கப்பட்ட விவகாரம் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பென்ட்லி நிறுவனம் பென்ட்லி முல்சானே ரக கார்களை தயாரிக்கிறது.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் அண்மையில் பென்ட்லி முல்சானே கார் திருட்டுப் போனது. இதுதொடர்பாக அந்த நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தி பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு கார் கடத்திச் செல்லப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பிரிட்டிஷ் அரசு சார்பில் பாகிஸ்தான் அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் பாகிஸ்தானின் சிந்து மாகாண சுங்க வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கராச்சி நகரில் அமைந்துள்ள பாதுகாப்பு வீட்டுவசதி ஆணைய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பென்ட்லி முல்சானே சொகுசு கார் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்த காரில் பாகிஸ்தான் பதிவு எண் இருந்தது. காரை ஆய்வு செய்தபோது லண்டனில் திருடு போன கார் என்பது உறுதி செய்யப்பட்டது.

காரை வைத்திருந்த ஜமீல் ஷபி என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, நவீத் பில்வானி என்பவர் காரை தன்னிடம் விற்பனை செய்ததாக கூறினார். எனினும், அதற்கான சட்டபூர்வ ஆவணங்களை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கப்பல் மூலம் பாகிஸ்தானுக்கு கார் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது. சுங்கத்திலிருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டு, 300 மில்லியன் ரூபாவிற்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. சுங்கத்திலுள்ள  “அடையாளம் தெரியாத“ உத்தியோகத்தர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்த விசாரணைகளில், பாகிஸ்தானில் உள்ள பல்கேரியா தூதர் அலெக்ஸ்சாண்டர் போரிசோவ் பரஷ்கேவோவ் என்பவரால் கார் பாகிஸ்தானிற்கு இறக்குமதி செய்யப்பட்டது தெரிய வந்தது.

2019ஆம் ஆண்டு சுங்கத்துறை இந்த காரை பறிமுதல் செய்ய முயன்றுள்ளது. அப்போது பல்கேரிய தூதரகம் தலையிட்டு, கார் யாருக்கும் விற்கப்படவில்லை, தூதரகத்தின் பாகிஸ்தான் சேவை ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காரை கைப்பற்றும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள நவீத் பில்வானி என்பவரே தூதர சேவை ஊழியராவார்.

எவ்வாறாயினும், கராச்சியிலுள்ள ஒருவரிற்கு கார் விற்கப்பட்டதை அறிந்த சுங்க அதிகாரிகள், காரை பறிமுதல் செய்ய முயன்றனர். ஆனால் நவீத் பில்வானி அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.  இதை தொடர்ந்து, 2020 இல் பல்கேரியா தூதரகம், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிற்கு கடிதம் எழுதியது. அதில் நவீத் பில்வானி தமது தூதரக பணியாளர் எனவும், இராஜதந்திர பணிக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியுள்ளதாகவும், நடைமுறையை மீறி அவர் மீது வழக்கு தொடர முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து பாகிஸ்தானிற்குள் சட்டபூர்வமாக கார் கொண்டு வரப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் கார் திருடப்பட்டதா இல்லையா என்பதை தம்மால் உறுதி செய்ய முடியாது என பாகிஸ்தான் சுங்கம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, காரை கைப்பற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

கார் திருடப்பட்டதாக தகவலளித்த பிரிட்டன் புலனாய்வுதுறையின் மேலதிக தகவலிற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்