ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் என்றார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் அதிக ஜனநாயகமுள்ள கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திகழ்ந்ததாகவும், தற்போது அதன் கட்சி ஜனநாயகம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை. கட்சியில் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை. பெயர் பலகை மட்டுமே உள்ளது” என்றார்.
தனக்கு கட்சி முக்கியமல்ல, கட்சியின் கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம், எனவே மக்களுக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1