மட்டக்களப்பு சந்திவெளியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இன்று பிற்பகல் 3:45 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளாகின. 21 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலே பலியாகினார். காயமடைந்த தாயும் 03 வயது குழந்தையும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
முருகன் கோவில் வீதி, கோரகல்லிமடு, கிரான் எனும் இடத்தை சேர்ந்த 21 வயதுடைய ஜீவரெத்தினம் சனுஜன் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
சந்திவெளி சந்தை வீதியை சேர்ந்த தாயும் மகளுமே பலத்த காயங்களுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
-ந.குகதர்சன்-