முத்துராஜவெல எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோலை ஏற்றிச் சென்ற பௌசரில் எரிபொருள் தீர்ந்து போனதால் சுமார் 10 மணித்தியாலங்கள் வழியில் நிறுத்தப்பட்டது.
புத்தளம் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட 19,800 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற தனியார் விநியோகஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான பௌசரே எரிபொருளின்றி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பௌசரில் எரிபொருள் தீர்ந்ததையடுத்து அதன் சாரதி அருகில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்த போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து டீசல் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1