பரீட்சையில் மாணவர்களிற்கு குறைந்த மதிப்பெண் வழங்கிதாக கூறி, கணித ஆசிரியரையும், பாடசாலை பதிவாளரையும் மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கோபிகந்தர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பாடசாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஜார்கண்ட் கல்வி கவுன்சில் சனிக்கிழமை 9 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்தது. இதில் பாடசாலையின் 32 மாணவர்களில் 11 பேர் டபுள் டி கிரேட் பெற்றுள்ளனர். பரீட்சையில் சித்தியடையாத தரம் இது.
செய்முறை பரீட்சையில் ஆசிரியர் குறைந்த மதிப்பெண்களை வழங்கியதாகவும், அதனால் பெருமளவு மாணவர்கள் சித்தியடையவில்லையென்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஜேஏசி இணையதளத்தில் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ததற்கு பதிவாளர்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
செய்முறை பரீட்சைகளின் மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட திகதியைக் காட்ட பாடசாலை நிர்வாகம் தவறிவிட்டது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்கள் எழுத்துப் பரீட்சையில் தோல்வியடைந்தார்களா அல்லது செய்முறையில் தோல்வியடைந்தார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வதந்தியால் மட்டுமே மாணவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆசிரியர் சுமன் குமார் என்றும், பதிவாளர் சோனேராம் சௌரே என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும், அவர்கள் மாணவர்கள் மீது புகார் கொடுக்க மறுத்து விட்டதாகவும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என தெரிவித்ததாகவம் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பாடசாலையில் 200 மாணவர்கள் இருப்பதாகவும், பெரும்பாலான மாணவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைடுத்து, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு வகுப்புகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, பாடசாலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.



