24.7 C
Jaffna
January 29, 2025
Pagetamil
இலங்கை

இரு கைகள், வலது காலை இழந்த மாணவி: இடது காலால் பரீட்சை எழுதி சித்தியடைந்தார்!

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற மாற்றுத்திறனாளியான மாணவியொருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அஹெலியகொட தேசிய பாடசாலையைச் சேர்ந்த ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற அந்த மாணவி, தனது இரு கைகளையும் வலது கையையும் இழந்தவர். இடது காலின் மூலம் பரீட்சை எழுதி சாதித்துள்ளார்.

வர்த்தக விஞ்ஞான பிரிவில் மூன்று ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

பிறவியிலேயே மாற்று திறன் சிறுமியான ரஷ்மி நிமேஷா தனது இரண்டு கைகளையும் வலது காலையும் இழந்திருந்தார். ஆனால், அந்த குறைகள் அவரைத் தடுக்கவில்லை.

தனது அன்றாட தேவைகள் மற்றும் கல்விக்கு ஏற்ப தனது இடது காலை பழக்கப்படுத்தி, அதனூடாக வாழ்க்கையை கட்டியெழுப்பியுள்ளார்.

அஹெலியகொட தேசிய பாடசாலையில் கடமையாற்றும் தனது பெற்றோர் மற்றும் அதிபர் மற்றும் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டிருந்தார்.

கேகாலை, தெஹியோவிட்ட, அம்பனொலுவ பாடசாலைகளில் ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து 2018 ஆம் ஆண்டு அஹெலியகொட தேசிய பாடசாலையில் பிரவேசித்த நிமேஷா, க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 8 ஏ மற்றும் ஒரு பி பெறுபேறு பெற்றார்.

பாடசாலை நிகழ்வுகளில் ஆங்கிலம், சிங்களத்தில் அறிவிப்புப் பணியிலும் அந்த மாணவியே ஈடுபட்டு வருகிறார்.

2017 ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச “தகவல் தொழில்நுட்ப” போட்டியில் ரஷ்மி நிமேஷா தங்கப் பதக்கம் வென்றார்.

இப்போதும் நிமேஷாவின் தந்தை சரத் குணவர்தன அஹெலியகொட தேசிய பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். தொடர்ந்து பணியாற்ற வயது அனுமதித்தாலும், அவரது தாயார் ஆசிரியை தம்மிக குணவர்தன  கடந்த மாதம் முதல் ஓய்வுபெற்றுள்ளார்.

ராஷ்மி, பாடுவதிலும் இசையிலும் உள்ளார்ந்த திறமை கொண்ட மாணவி. இதுவரை நான்கு தனி இசைக் கச்சேரிகளை நடத்தி, மக்களாலும், மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டது.

ஷ்மியின் சகோதரி களனி பல்கலைக்கழக உயிரியல் பிரிவில் இரண்டாம் வருட பட்டதாரி மாணவியாக கல்வி கற்று வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment