Pagetamil
இலங்கை

தன்பாலின உறவில் ஈடுபடும் யுவதியை பெற்றோரின் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தது நீதிமன்றம்: இலங்கையில் முதன்முறை தீர்ப்பு!

தன் பாலின உறவில் ஈடுபடும் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்திய பெற்றோரிடமிருந்து அந்த பெண், பாதுகாக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கை வரலாற்றில் இவ்வாறான தீர்ப்பு வழங்கப்படுவது இதுவே முதன்முறையென சுட்டிக்காட்டப்படுகிறது.

கடுவெல நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது .

அவரது பாலியல் நோக்குநிலையின் காரணமாக வீட்டில் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளான யுவதி, வீட்டிலேயே சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், லெஸ்பியன் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது பெற்றோர் வெலிசர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயன்றனர்.

அந்த பெண்ணின் பாலியல் நோக்குநிலை காரணமாக மனநல மதிப்பீட்டை நடத்தவும், அவரது ஓரினச்சேர்க்கைக்கான ஆதாரங்களைக் கண்டறிய உடல் பரிசோதனைக்கு உட்படுத்தவும் போலீசார் முயன்றனர் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

வழக்குகளில் ஓரினச்சேர்க்கைக்கான “ஆதாரங்களை” கண்டுபிடிப்பதற்காக, போலீஸ் அதிகாரிகளும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளும் தன்பாலின நபர்களுக்கு கட்டாய குத மற்றும் பிறப்புறுப்பு பரிசோதனைகளை நடத்தியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் உள்ளன என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமோ அல்லது மனநோயோ அல்ல என்று வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பின்னர், அந்தப் பெண் தனது துணையுடன் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், பெற்றோரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்தார்.

தனது பெற்றோரிடமிருந்து தொடர்ந்தும் துன்புறுத்தலை எதிர்கொள்வதால். அந்தப் பெண் பாதுகாப்பு கோரினார்.

அவரை துன்புறுத்தக் கூடாதென நீதிமன்றம் ஒரு இடைக்கால ஆணை வழங்கிது, மேலும் அவரது தனிப்பட்ட உடைமைகள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோருக்கு மற்றொரு உத்தரவு வழங்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment