மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கனிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும் அதே நேரம் மீன் வளம் மற்றும் கடல் வளங்களை அழிக்கும் காற்றாலை மின்செயற்திட்டத்தை மன்னார் தீவக பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டாம் என கோரி பேசாலை பொது மக்கள் புதன் கிழமை (24) பேசாலை நகர் பகுதியில் கண்டன போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் எங்கள் வருங்காலத்தை தடைசெய்ய வேண்டாம் ,ஆர்பாட்டமே எங்கள் வாழ்க்கையா?எங்கள் மாவட்டம் எங்களுக்கு வேண்டும்,தீர்மானமும் முடிவும் நீங்கள் மட்டும் தான நாங்கள் இல்லையா,அமைதியாய் வாழ்கின்றோம். அகோரப்படுத்தாதீர்கள்,எங்கள் கடலில் மீன் வருதில்ல காற்றாடிதான் காரணம் போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தின் பின் பொது மகஜர் பொது மக்களுக்கு வாசிக்கப்பட்டு அதனை தொடந்து ஊர்வலமாக சென்று மன்னார் பிரதேச சபையில் மகஜரை கையளிக்க சென்றனர்.
இந்த நிலையில் மகஜரை பெற்று கொள்ள வேண்டிய தவிசாளர் பிரதேச சபையில் இல்லாத நிலை சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
அதே நேரம் பேசாலை பகுதியில் இடம் பெறும் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கு காற்றாலை செய்ற்திட்டத்திற்கு முழு பொறுப்பும் மன்னார் பிரதேச சபை தான் எனவும் மகஜரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மன்னார் பிரதேச சபை தவிசாளர் இஸ்ஸதீன் ஓடி ஒளிந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈட்பட்ட மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
தொடர்சியாக காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக பிரதேச சபைக்கு முன்பாக கேஷங்களை எழுப்பிய பொது மக்கள் பிரதேச சபை தவிசாளர் இல்லாத நிலையில் உப தவிசாளரிடமோ, செயலாளரிடமோ மகஜரை கையளிக்க விரும்பவில்லை என தெரிவித்து கலைந்து சென்றனர்.
மன்னார் போசாலை பகுதியில் முழுவதும் கடைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.