Pagetamil
குற்றம்

பொலிஸ் வாகனங்களில் தங்க நகை திருடிய பெண் கைது!

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் பதிவாகிய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பொலிஸ் வாகனங்கள் மீது தாக்குதல் மற்றும் தீ வைத்தமை மற்றும் வாகனங்களில் பயணித்த டி.ஐ.ஜி மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பொலிஸ் வாகனங்களில் இருந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

திருடப்பட்ட தங்க நகைகளை வைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  அதிகாரிகளால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!