26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம்: கோட்டா கால ‘சர்வதேச சிக்கலுக்குள்’ சிக்குகிறது ரணில், பெரமுன அரசு!

மக்கள் போராட்டக்காரர்கள் மீது ரணில், ராஜபக்ஷ அரசின் வேட்டைக்கு எதிராக இலங்கைக்குள்ளும், சர்வதேச அளவிலும் கடுமையான எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

போராட்டக்காரர்களை வேட்டையாடுவது, மாணவர் போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம்-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பயன்பாட்டிற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய தகவல்களை நாங்கள் குறிப்பிடுகிறோம். சமீபத்திய கைதுகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது பற்றிய அறிக்கைகள் குறித்து கவலையடைகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதர் ஜூலி சுங்-

பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது. மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம்.

இலங்கைக்கான கனடா தூதர் டேவிட் மெக்கின்னன்-

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய இலங்கையில் உள்ள அதிகாரிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். பயங்கரவாத தடைச்சட்டம் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத வகையில் பரவலாகக் காணப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச –

பயங்கரவாத தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் மாணவர்களின் மற்றும் நமது நாட்டின் அடுத்த தலைமுறையினரின் குரலை நசுக்குவது கண்டிக்கத்தக்கது. மக்களைப் பாதுகாப்பதே அரசின் கடமை. மக்கள் நலன் மற்றும் ஜனநாயகத்தின் நலன் கருதி அரசு செயல்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

அரசியலமைப்பின் கீழ்உள்ள சுதந்திரங்களின் கீழ் செயற்படும் எந்தவொரு பிரஜை மீதும் பயங்கரவாதியென பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஏற்புடைதல்ல என இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

எவரேனும்ஒருவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால், அவருக்கு எதிரான சகல சாட்சியங்களையும் நீதிமன்றத்தின்முன்கொண்டு வர வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோகிணி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

Leave a Comment