மன்னாரில் முட்டைகள் மாயம்!

Date:

நாடளாவிய ரீதியில் முட்டை விலை இன்று (22) திங்கட்கிழமை முதல் குறைக்கப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முட்டை விலை குறைக்கப்படவில்லை என்பதுடன் மன்னாரில் முட்டை விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு என முட்டைகள் இல்லாத நிலையே காணப்படுகிறது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன வுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முட்டை விலை குறைப்பு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று முதல் முட்டையின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

இருந்த போதிலும் முட்டையில் விலை குறைக்கப்படவில்லை என்பதுடன் முட்டை விற்பனைக்கு சந்தைக்கு வரவில்லை என உள்ளூர் முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்

அதே நேரம் கோழித்தீன் மற்றும் முட்டைத் தீன் போன்றவற்றின் விலைகளை அரசாங்கம் குறைக்காமல் முட்டையின் விலையை குறைத்தால் இதே போன்று முட்டை விற்பனைக்கு வராத நிலையே ஏற்படும் எனவும் அரசாங்கம் கோழிகளுக்கான தீண்களின் விலையை முதலில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் முட்டை விலை மாத்திரம் இன்றி கோழி இறைச்சியின் விலையும் குறைவடையும் என உள்ளூர் கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நாள் நிலவரப்படி ஒரு கிலோ புறைலர் கோழி இறைச்சி 1600 ரூபாவாகவும் ஒரு வெள்ளை முட்டையின் விலை 70 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்