உத்திரபிரதேச மாநிலத்தில் இன்னொரு பெண்ணுடன் காரில் தனியாக இருந்த பாஜக தலைவரை அவரது மனைவியும் அந்த பெண்ணின் கணவரும் நடுரோடு என்று கூட பார்க்காமல் செருப்பால் அடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மோகித் சோங்கர் என்பவர்தான் இந்த வீடியோவில் இருக்கும் பாஜக தலைவர். இவர் புண்டேல்கண்ட் பகுதியில் பாஜக செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இவர் பாஜக சார்பில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் மகளிர் பிரிவின் துணைத் தலைவரான பிந்து என்பவர் உடன் மோகித்துக்கு முறையற்ற உறவு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை மோகித்தின் மனைவி கண்டித்திருக்கிறார். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் பிந்துவுடன் பாஜக தலைவரான மோகித் தொடர்ந்து முறையற்ற உறவைத் தொடர்ந்ததோடு தனது காரில் அவரை அழைத்துக்கொண்டு பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி அவரை கையும் களவுமாக பிடிக்க தக்க சமயம் எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் தான் இன்று அதிகாலையில் மோகித் பிந்துவுடன் தனது காரில் சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற அவரது மனைவி இருவரையும் காரில் வைத்து கையும் களவுமாக பிடித்ததோடு கணவன் என்றும் பாராமல் சட்டையை பிடித்து வெளியே தள்ளி தன் காலில் அணிந்திருந்த செருப்பால் அடித்து துவம்சம் செய்தார். மேலும் அவரது உடன் இருந்த பாஜக மகளிரணி தலைவி பிந்துவுக்கும் அடி விழுந்தது. இதனை வீடியோ எடுத்து வெளியிட்டவர் வேறு யாருமில்லை பிந்துவின் கணவர் தான். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவி பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து பேசிய அப்பகுதி காவல் காவல் அதிகாரிகள் தற்போது வீடியோ குறித்து ஆராய்ந்து வருவதாகவும் முழுமையான விசாரணைக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
Just now #BJP Kanpur-Bundelkhand regional minister Mohit Sonkar has been caught celebrating rally in a car with his girlfriend BJP Mahila Morcha Vice President Bindu. Sonkar's wife and his family members beat Netaji with slippers. Amazing culture amazing women respect @zoo_bear pic.twitter.com/sOYU4vubNM
— iqbalmangalor (@iqbalmangalor) August 20, 2022