இரண்டு கார் வெடிகுண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளைத் தொடர்ந்து சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
“ஹயாத் ஹோட்டலை குறிவைத்து இரண்டு கார் குண்டு வெடிப்ர்க்கள் நடத்தப்பட்டன. ஒன்று ஹோட்டலுக்கு அருகில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி, மற்றொன்று ஹோட்டலின் வாயிலில் மோதியது. போராளிகள் ஹோட்டலுக்குள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என்று தனது பெயரை அஹமட் என்று மட்டுமே வழங்கிய ஒரு போலீஸ் அதிகாரி ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அடையாளம் காண விரும்பாத இரண்டு உளவுத்துறை அதிகாரிகளும் இந்த சம்பவத்தை உறுதி செய்தனர்.
பயங்கரவாத குழு அறிக்கைகளை கண்காணிக்கும் SITE புலனாய்வு குழுவின் தகவலின்படி, அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் குழு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
ஹோட்டலில் இருந்து வெடிப்புச் சத்தம் இன்னும் கேட்கப்பட்டாலும், எந்த உயிரிழப்புகள் பற்றிய உடனடி விவரங்களும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஹயாத் என்பது மொகடிஷுவில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும், அங்கு பல ஹோட்டல்கள் அமைந்துள்ளன. சோமாலிய அரசின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்லும் பிரபலமான இடமாகும்.
மே மாதம் ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது பதவியேற்ற பிறகு வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல் முதல் பெரிய தாக்குதல் ஆகும்.
கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களுக்கு அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. ஓகஸ்ட் 2020 இல், மொகடிஷுவில் மற்றொரு ஹோட்டலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இது இருப்பதாக அது கூறியது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சோமாலிய அரசை கவிழ்க்க இந்த குழு போராடி வருகிறது. இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான விளக்கத்தின் அடிப்படையில் அதன் சொந்த ஆட்சியை நிறுவ விரும்புகிறது.
#UPDATE: The unsung heroes of Somali Police Special Unit have rescued many people from #Hayat Hotel in #Mogadishu as the security forces are dealing with terrorist incident. #Somalia pic.twitter.com/MDCG4j5EuC
— SONNA (@SONNALIVE) August 19, 2022
நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அரசு நடத்தும் சோமாலி தேசிய செய்தி நிறுவனம் தனது ருவிற்றர் கணக்கில் தெரிவித்துள்ளது.