சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக, இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக கீர்த்தி ஷெட்டிநடிக்கிறார். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், தொடங்கவில்லை.
இதற்கிடையில், அந்தப் படத்துக்கு முன்பாகஅவர், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தி நடிகை திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைப் படவட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பான் இந்தியா படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்குகிறது. தேஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்