சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றின் இலங்கைக்கான விஜயத்தின் போது கடனாளிகளிடமிருந்து போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை முகங்கொடுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவிப் பொதியை அறிமுகப்படுத்துவதற்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் தாங்க முடியாதது என தீர்மானிக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெறுவதற்கு, கடன் நிலைத்தன்மையை இலங்கை மீட்டெடுக்கும் போதுமான உத்தரவாதம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. .
இலங்கைக்கு விஜயம் செய்யும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவிற்கு மசாஹிரோ நோஸாகி மற்றும் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் தலைமை தாங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.