நானுஓயா அம்பேவல வாவியில்உயிரிழந்த நிலையில் ஹோட்டன் சமவெளி மான்கள் பலவற்றின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
ஒரு வாரத்திற்குள் இதுபோன்ற பத்து மான்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நீர்த்தேக்கத்திற்கு தண்ணீருக்காக வரும் இந்த விலங்குகளை வேட்டையாடுபவர்களாலேயே இந்த அனர்த்தம் இடம்பெறுகிறது. மான்களை வேட்டையாட பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை ஏவி விடுவதால், நாய்க்கடியுடன் தப்பிச் சென்ற மான்களே நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நீர்த்தேக்கத்தின் நீரை குடிப்பதற்கும் பாசனத்துக்கும் தலாக்கலை, ரேந்தபொல, வெலிமடை உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்துகிறார்கள். நீர் மாசடைவதால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் வனவிலங்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்