ஆசிரியைக்கு ‘BP’ என்பதால் மாணவர்கள் ‘சின்ன சம்பவம்’ செய்தார்களாம்: ஸ்மார்ட் வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாடசாலை மின் விநியோகத்தை நிறுத்தினர்!

Date:

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்கள் இருவரை, ஸ்மார்ட் வகுப்பறையிலிருந்து ஆசிரியை ஒருவர் வெளியேற்றினார். இதையடுத்து வகுக்கறையிலிருந்து வெளியில் வந்த மாணவர்கன் இருவரும், ஆசிரியர் ஓய்வறைக்குள் நுழைந்து அந்த பாடசாலைக்கான பிரதான மின் ஆழியை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

இந்த பகீர் சம்பவம் கடந்த சில தினங்களின் முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தின், பளை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் நடைபெற்றது.

சம்பவ தினத்திலன்று பாடசாலை ஆசிரியை , மாணவர்களிற்கு ஸ்மார்ட் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இதன்போது, இரண்டு மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளனர். அவர்களை வகுப்பறைக்கு வௌியில் நிற்குமாறு ஆசிரியை தண்டனை வழங்கினார்.

இதையடுத்து வகுப்பறைக்கு வெளியில் வந்த மாணவர்கள் இருவரும், பாடசாலையின் ஆசிரியர் ஓய்வறைக்கு சென்றுள்ளனர்.

அங்கு சில ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்களிடம் சென்று, “(குறிப்பிட்ட) ஆசிரியை ஸ்மார்ட் வகுப்பறையிலிருந்து எம்மை வெளியேற்றி விட்டார்.  நாம் திரும்பவும் போய் வகுப்பறைக்குள் இருந்து விடுவோம். ஆனால் அவர் பாவம். பிரசர் வருத்தமுள்ளவர். அவரை நோயாளியாக்க விரும்பவில்லை’ என கூறிவிட்டு, ஆசிரியர் ஓய்வறைக்குள் இருந்த பாடசாலைக்கான பிரதான மின் ஆழியை நிறுத்தி விட்டு பாடசாலையை விட்டு வெளியேறி சென்று விட்டனர்.

மின்துண்டிக்கப்பட்டதால் ஸ்மார்ட் வகுப்பு பாதிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்