ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்கள் இருவரை, ஸ்மார்ட் வகுப்பறையிலிருந்து ஆசிரியை ஒருவர் வெளியேற்றினார். இதையடுத்து வகுக்கறையிலிருந்து வெளியில் வந்த மாணவர்கன் இருவரும், ஆசிரியர் ஓய்வறைக்குள் நுழைந்து அந்த பாடசாலைக்கான பிரதான மின் ஆழியை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இந்த பகீர் சம்பவம் கடந்த சில தினங்களின் முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தின், பளை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் நடைபெற்றது.
சம்பவ தினத்திலன்று பாடசாலை ஆசிரியை , மாணவர்களிற்கு ஸ்மார்ட் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இதன்போது, இரண்டு மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளனர். அவர்களை வகுப்பறைக்கு வௌியில் நிற்குமாறு ஆசிரியை தண்டனை வழங்கினார்.
இதையடுத்து வகுப்பறைக்கு வெளியில் வந்த மாணவர்கள் இருவரும், பாடசாலையின் ஆசிரியர் ஓய்வறைக்கு சென்றுள்ளனர்.
அங்கு சில ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அவர்களிடம் சென்று, “(குறிப்பிட்ட) ஆசிரியை ஸ்மார்ட் வகுப்பறையிலிருந்து எம்மை வெளியேற்றி விட்டார். நாம் திரும்பவும் போய் வகுப்பறைக்குள் இருந்து விடுவோம். ஆனால் அவர் பாவம். பிரசர் வருத்தமுள்ளவர். அவரை நோயாளியாக்க விரும்பவில்லை’ என கூறிவிட்டு, ஆசிரியர் ஓய்வறைக்குள் இருந்த பாடசாலைக்கான பிரதான மின் ஆழியை நிறுத்தி விட்டு பாடசாலையை விட்டு வெளியேறி சென்று விட்டனர்.
மின்துண்டிக்கப்பட்டதால் ஸ்மார்ட் வகுப்பு பாதிக்கப்பட்டது.