கடந்த சில நாட்களாக இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானங்கள் காரணமாக பொருளாதாரம் ஓரளவு சாதகமான முடிவுகளை பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் 70 வீதத்தை விட அதிகமாக இருக்கும் என ஊகித்தாலும் நிலைமை குறைந்துள்ளதாகவும் பணவீக்கம் 60 வீதத்தை விட அதிகமாக இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகின்றார்.
எரிபொருள், எரிவாயு மற்றும் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான அந்நிய செலாவணி இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகிறார்.
இறக்குமதி கட்டுப்பாட்டினால் நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்து வருவதாகவும், இறக்குமதி செலவுகள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அடிப்படைத் தேவைகளை நிர்வகிக்கும் திறன் எங்களிடம் உள்ளது என்றும் வங்கிக் கடன் விரிவாக்கம் போதுமான அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.