பளையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

Date:

பளை‌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று (18) வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை, இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது.

வீட்டில் மேறகொள்ளப்பட்ட தேடுதலின் போது 910கிராம் வெடிமருந்து கழற்றிய நிலையில் இரண்டு மோட்டார் குண்களும், நல்ல நிலையில் மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

வீட்டு உரிமையாளரை கைது செய்த பளை பொலிசார் இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்