27.5 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

வசந்த முதலிகே மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி; அரசின் ‘மூர்க்க முடிவிற்கு’ பல தரப்பும் கண்டனம்!

நேற்று (18) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட இருவரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே தடுப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு மேலதிகமாக ஹஷான் குணதிலக்கவை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வசந்த முதலிகே ஹஷான் குணதிலக்க உள்ளிட்ட 16 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 16 சந்தேக நபர்களையும் பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டதுடன், வசந்த முதலிகே ஹஷான் குணதிலக்கவை 90 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.

ஆட்சிக்கவிழப்பு சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தியே அவர்களை தடுத்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த போராட்டக்காரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், யுத்த காலப்பகுதியில் தமிழ் மக்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், தற்போது மக்களாணை இல்லாத அரசாங்கத்தை தக்கவைக்க தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துப்பாக்கியுடன் மாயமான திருகோணமலை கடற்படைச் சிப்பாய்!

Pagetamil

ரணில் அரசு இடைநிறுத்திய மின்சாரசபையின் 62 ஊழியர்களுக்கும் மீண்டும் பணி!

Pagetamil

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் மோசடி

Pagetamil

Leave a Comment