Pagetamil
இலங்கை

சந்தேகத்திற்கிடமான மாத்திரைகளுடன் பெண் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவின் பெண் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சில மாத்திரைகளுடன் சிறைச்சாலைக்குள் நுழைய முயற்சித்துள்ளார். அதன் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை வீரரொருவரின் பரிசோதனையின் போது மாத்திரைகள் இருப்பது தெரிந்து அவற்றை எடுத்ததும், சிறைச்சாலை பெண் உத்தியோகத்தர்  மாத்திரைகளை பறித்து விழுங்க முயற்சித்த போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த மாத்திரைகளின் வகை குறித்து சிறைச்சாலை பெண் உத்தியோகத்தரிடம் கேட்டபோது, ​​உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நிலைகளுக்கு பயன்படுத்துவதாக கூறியதாகவும் தெரிகிறது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய மாத்திரைகள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான மாத்திரைகள் மருந்து மாத்திரைகளா அல்லது போதை மாத்திரைகளா என சிறைச்சாலை வைத்தியசாலையில் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் தெரியவரும் எனவும் அந்த மாத்திரைகள் போதை மாத்திரைகள் என தெரியவந்தால் சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

Leave a Comment