27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இந்தியா

மோசடிப் பணம் என தெரிந்தே ஜாக்குலின் பங்குதாரராக இருந்தார்: நீதிமன்றத்தில் தகவல்!

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பணம் பறிப்பவர் என்பதை தெரிந்த பின்னரும், அவருடன் ஜாக்குலின் உறவில் இருந்தார், மோசடி பணத்தின் பங்கு தாரராக இருந்தார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அவரது ரூ.7 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டன.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தற்போது ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்துள்ளது.

அமலாக்கத்துறை அறிக்கைகளின்படி, மிரட்டி பணம் பறித்த பணத்தின் பயனாளியாக ஜாக்குலின் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சுகேஷ் ஒரு மிரட்டி பணம் பறிப்பவர் என்பது அவருக்குத் தெரியும் என்று ஏஜென்சி நம்புகிறது. ஜாக்குலின் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து விலையுயர்ந்த பரிசுகளை பெற்றுள்ளார். இவ்வாறு பெறப்பட்ட டிசைனர் கைப்பைகள், கார் மற்றும் வைரங்கள் ஆகியவை தற்போது கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.

இதையடுத்து இந்த வழக்கில் நேரடியாக கருத்து தெரிவிக்காமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை ஒன்றை இட்ட ஜாக்குலின் அதில், “நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள், நான் சக்தி வாய்ந்தவள், நான் என்னை ஏற்றுக்கொள்கிறேன், எல்லாம் சரியாகிவிடும். நான் வலுவாக இருக்கிறேன், எனது இலக்குகள் மற்றும் கனவுகளை நான் அடைவேன், என்னால் அதைச் செய்ய முடியும்” என்று மேற்கோளை சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கின் பின்னணி

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி போலீஸார் கடந்த 2017இல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர்.

அவர் மீது 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர், ரூ.2000 கோடி பணமோசடி வழக்கில் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாகக் கூறிய சுகேஷ் சந்திரசேகர், அவ்விருவரின் மனைவிகளிடமிருந்து ரூ.200 கோடி பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உட்பட 8 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின்போது, சுகேஷ் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பெர்சிய பூனைகள், மினி ஹெலிகொப்டர், சொகுசு ரக பார்ஷே கார், ரோலக்ஸ் கடிகாரம் என சுமார் 10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

ஜாக்குலின் தவிர, மற்றொரு பாலிவுட் நடிகையான நூரா ஃபதேயிக்கும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை சுகேஷ் பரிசளித்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜாக்குலினும் நூரா ஃபதேயியும் அமலாக்கத் துறையினால் விசாரிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாக்குலின் – சுகேஷ் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

அமலாக்கத்துறை ஜாக்குலின் மீது தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், “விசாரணையின் போது, ​​ஜாக்குலின் பெர்னாண்டஸின் வாக்குமூலம் 30.08.2021 மற்றும் 20.10.2021 ஆகிய திகதிகளில் பதிவு செய்யப்பட்டது.

சுகேஷ் 20.10. 2021 அன்று ஜாக்குலினை எதிர்கொண்டார்.

பரிசுப் பொருட்கள் தொடர்பில் சந்திரசேகர் தன்னால் நினைவுகூர முடியவில்லை என்று கூறியபோது,  ​​ஜாக்குலின் கூறினார்- அவர் குஸ்ஸி, சேனல், செயிண்ட் லாரன்ட் மற்றும் டியோர் நான்கு பைகளைப் பெற்றார்; லூயிஸ் உய்ட்டன் மற்றும் லூபவுட்டின் இரண்டு காலணிகள்; குஸ்ஸியின் இரண்டு ஆடைகள்; வாசனை திரவியங்கள்; நான்கு பூனைகள்; ஒரு மினி கூப்பர்; இரண்டு வைர காதணிகள்; பல வண்ண வைர வளையல் சந்திரசேகரிடமிருந்து பெற்றதாக குறிப்பிட்டார்.

ஜாக்குலின் சார்பில் அத்வைத கலாவுக்கு ரூ.15 லட்சம் ரொக்கம் கொடுத்தீர்களா என்று சந்திரசேகரிடம் அமலாக்கத்துறை கேட்டபோது, ஜாக்குலின் மற்றும் சந்திரசேகர் இருவரும் அதை உறுதிப்படுத்தினர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

52 லட்சம் மதிப்புள்ள குதிரையும், ₹ 9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கிய ₹ 10 கோடி மதிப்புள்ள பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டதாக ஏஜென்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூன் 2021 இல் சென்னையில் சந்திரசேகரை இரண்டு முறை சந்தித்ததாகவும் ஜாக்குலின் கூறினார். சுகேஷ் சந்திரசேகர் தனிப்பட்ட ஜெட் பயணங்களையும் ஹோட்டல் தங்குவதற்கும் ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment