26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

‘தாத்தா பொறுப்பையாவது’ சரியாக செய்ய விரும்பும் கோட்டா: அமெரிக்காவில் வசிக்க கிரீன் கார்ட் விசாவிற்கு விண்ணப்பம்!

கடந்த மாதம் ,இலங்கையை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மனைவி அயோமா ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால், கிரீன் கார்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தை அமெரிக்காவில் உள்ள ராஜபக்சவின் சட்டத்தரணிகள் கடந்த மாதமே தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடைமுறையின் ஒரு கட்டமாக,  இப்போது கொழும்பில் உள்ள அவரது சட்டத்தரணிகள் கூடுதல் ஆவணங்களை இங்கு சமர்ப்பித்து நடைமுறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள கோட்டா, தனது மனைவியுடன் பாங்கொங்கில் உள்ள ஹோட்டலில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி, நவம்பர் மாதம் வரை தாய்லாந்தில் தங்குவதற்கு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த திட்டத்தை தற்போது இரத்து செய்து விட்டு, ஓகஸ்ட் 25 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கோட்டாபய தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்ததாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக தாய்லாந்தில் தங்க திட்டமிட்டிருந்தாலும், எதிர்பார்த்தபடி சுதந்திரமாக நடமாடும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இந்த மாத இறுதியிலேயே இலங்கை திரும்ப முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து சென்றடைந்ததும், அவருக்கு அந்த நாட்டு பொலிசார் சில கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்த ஹொட்டல் அறையை விட்டு வெளியே தலையையும் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

கோட்டாபய தங்கியிருக்கும் ஹொட்டலில் அமைவிடம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. எனினும், அந்த ஹொட்டலில் சிவில் உடையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தாய்லாந்தில் பௌத்த வணக்கதலங்களிற்கு செல்ல விரும்பிய கோட்டா, அதற்கான அனுமதியை கோரியதாகவும், அதற்கும் தாய்லாந்து அனுமதியளிக்கவில்லை.

நான்கு சுவருக்குள் அடைந்திருக்க முடியாது என்பதால், நாடு திரும்பும் முடிவை கோட்டாபய எடுத்துள்ளார்.

இந்த மாதம் கோட்டாபய இலங்கைக்கு திரும்பியதும், அவருக்கு அரச இல்லம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குவது குறித்து அமைச்சரவை ஆலோசிக்கவுள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து, கோட்டாபய இலங்கையில் எங்கும் பதுங்கியிருக்க முடியாத நிலையில் கடந்த மாதம் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார். மருத்துவ விசாவில் சிங்கப்பூருக்குள் நுழைந்த அவர், முடிந்தவரை அங்கேயே இருக்க விரும்பினாலும், ஒரு முறைக்கு மேல் அவரது விசாவை நீடிக்க சிங்கப்பூர் மறுத்து விட்டது.

இதையடுத்து, கோட்டாவும் மனைவியும் தாய்லாந்திற்குச் சென்றனர். பாதுகாப்பான தங்குமிடத்தை அடையாளம் காணும் வரை, அவர் அங்கேயே இருக்க முடியும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இருப்பினும் தாய்லாந்தில் அவரது நடமாட்டம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்புவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 24 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது!

Pagetamil

‘எமது காணியை மோசடி செய்து விட்டார்கள்’: கிளிநொச்சி நபர் பரபரப்பு புகார்

Pagetamil

கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரின் சட்டவிரோத துப்பாக்கிச்சூடு… ரணில் வழங்கிய பணப்பரிசில்: சிஐடி புதிய விசாரணை!

Pagetamil

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

Leave a Comment