கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உகுரஸ்ஸபிட்டிய, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 76 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் அணிந்திருந்த 32,500 ரூபா பெறுமதியான தங்க நகையையும் சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.